முட்டைகளை இடும் கோழி ….!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டுவென்டி டுவென்டி போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த போட்டியில் விராட் கோலி ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார் , இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து கோலி, இன்று 1வது T20 போட்டியிலும் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இறுதி 5 சர்வதேச இன்னிங்ஸ்களில் கோலி மூன்று தடவைகள் முட்டைகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள கோலி 71 ஆவது சதத்தை பெறுவதற்கு 456 நாட்களை கடந்து உள்ளமையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

கோலி விரைவாக மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.