முதலாவது T20 போட்டி இந்தியா சார்பில் இரண்டு அறிமுகம், இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி..!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி ஆரம்பித்துள்ளது.
போட்டியில் நாணயச்சுழற்சியில் இலங்கை அணியின் அணித்தலைவர் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பு செய்யும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் இலங்கை சார்பில் இன்று விளையாடுகின்ற வீரர்களில் இசுரு உதானவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இந்தியா சார்பில் இரண்டு வீரர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டுள்ளது. வருண் சக்கரவர்த்தி மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளனர். முதலில் இந்திய அணி துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.