வங்கதேச கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாடும் வாய்ப்பை தமதாக்கினார்.
இதன்படி இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்று அமோகமான ஆரம்பத்தை பெற்றுள்ளது.
முதல் இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்துள்ள இலங்கைக்கு இன்று ஒரு ஆறுதல் வெற்றி தேவைப்படுகிறது ,இந்த நிலையில் இலங்கை அணி சார்பில் இன்று டிக்வெல்ல அணிக்கு கொண்டுவரப்பட்ட அதேநேரம் இலங்கை சார்பில் 3 வீரர்களுக்கு இன்று அறிமுகம் வழங்கப்படுகிறது.
சகலதுறை ஆட்டக்காரரான ரமேஷ் மென்டிஸ் சமிக்க கருணாரத்ன மற்றும் பினுர பெர்னான்டோ ஆகியோருக்கும் இன்று அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு பலம் பொருந்திய அணியாக இலங்கை இன்றைய போட்டியை எதிர் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.