முதல் இடத்தை நோக்கி நகரும் ஹசரங்க_ டி20 தரவரிசையில் பாரிய முன்னேற்றம் ..!

முதல் இடத்தை நோக்கி நகரும் ஹசரங்க_ டி20 தரவரிசையில் பாரிய முன்னேற்றம் ..!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வளர்ந்து வரும் இளம் வீரர் ஹசரங்க, T20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தரவரிசையில் 5-வது இடத்தையும் அதற்குப் பின்னரான தரவரிசையில் 4-வது இடத்தையும் பெற்றுக் கொண்ட ஹசரங்க, இப்போது T29 பந்துவீச்சு தர நிலையில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதன் காரணத்தால் விரைவில் இலங்கையின் பந்து வீச்சாளர் ஒருவர் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை எட்டுவதற்கான வாய்ப்பை ஹசரங்க தனதாக்கி கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் T20 போட்டிகளுக்கான துடுப்பாட்ட, பந்துவீீச்சு தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இதிலே பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் Shamsi முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அதே நேரத்தில், இலங்கையின் பணிந்து ஹசரங்க மூன்றாவது இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களையும் சுழற்பந்து வீச்சாளர்களை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் ஹசரங்கவை முதல் இடத்தில் பந்துவீச்சாளர் தரநிலையில் பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிட்டும் என்றே நம்பலாம்.

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை?????

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை ?????