முதல் ஒருநாள் போட்டி பலமான வெற்றி இலக்கை நிர்ணயித்தது இலங்கை_ நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

முதல் ஒருநாள் போட்டி பலமான வெற்றி இலக்கை நிர்ணயித்தது இலங்கை_ நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் தற்சமயம் R பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் தசுன் சானக முதலில் துடுப்பாட விருப்பம் வெளியிட்டார்.

 இலங்கை சார்பில் பானுக ராஜபக்ச இன்று அறிமுகம் மேற்கொண்டார், இதனடிப்படையில் 50 ஓவர் முழுவதும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கையின் ஆரம்ப வீரர்கள்  மிகச்சிறந்த ஆரம்பித்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் ராஜபக்சே 22 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார் .

இதன் மூலமாக இலங்கை அணி மிகச் சிறப்பான 262 ஓட்டங்கள் எனும் இலக்கை பெற்றது. அண்மை காலமாக தொடர்ச்சியாக தடுமாறி வரும் இலங்கை இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சகல விக்கட்டுக்களையும் இழக்காமல் 50 ஓவர்கள் முழுவதையும் சந்தித்திருக்கின்றமை இலஙலகை ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

263 எனும் இலக்குடன் தவான் தலைமையிலான இந்திய அணி துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை அணி இறுதிப் பத்து ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது, இது மாத்திரமல்லாமல் இறுதி இரண்டு ஓவர்களில் இலங்கை அணி 32 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதையும் சிறப்பம்சம், 50-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமாரின் இறுதி ஓவரில் சமிக்க கருணாரத்ன 2 சிக்சர் ஒரு பவுண்டரி பெற்றுக் கொண்டார்.

சமிக்க ஆட்டமிழக்காது 35 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், இதன்மூலம் இலங்கை அணி 262ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது .

இலங்கையில் இடம்பெற்று பகல்-இரவு ஆட்டங்களில் 250க்கும் மேற்பட்ட ஓட்ட எண்ணிக்கையை துரத்தி அடித்து வெற்றி பெற்ற வரலாறுகள் 67 போட்டிகளில் வெறும் 7 மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.