முதல் நாளில் சொதப்பிய இந்தியா- ரோஹித் அதிரடி சதம்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் இன்று சென்னையில் ஆரம்பித்தது, போட்டியில் முதல் நாள் நிறைவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பில் சுப்மான் கில் மற்றும் கோஹ்லி ஆகியோர் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
புஜாரா 21 ஓட்டங்களையும், ரஹானே 67 ஓட்டங்களையும் , ரோஹித் சர்மா 161 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

ஆடுகளத்தில் பாண்ட் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
நாளை 2 ம் நாள் ஆட்டம் தொடரும்.