முதல் பந்திலேயே கோஹ்லி இத்தனை தடவைகள் ஆட்டமிழந்தாரா ?
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நொட்டிங்காம் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
பதிலுக்கு ஆடிவரும் இந்திய அணி ஆரம்ப இணைப்பாட்டம் 97 ஓட்டங்களாக இருந்தாலும், அதன்பின்னர் வந்த புஜாரா, கோஹ்லி, ரஹானே ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினார்.
கோஹ்லி இன்று ஆண்டர்சன் வீசிய ஓவரில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார். கோஹ்லி இதற்கு முன்னர் 4 தடவைகள் டெஸ்ட்டில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்துள்ளார்.
*அவுஸ்ரேலியா, MCG 2011/12 (பென் ஹில்ஃபென்ஹாஸ்)
*இங்கிலாந்து, லோர்ட்ஸ் 2014 (லியாம் பிளங்கெட்)
*இங்கிலாந்து, ஓவல் 2018 (ஸ்டூவர்ட் பிராட்)
*WI, கிங்ஸ்டன் 2019 (கெமர் ரோச்)
*இங்கிலாந்து, ட்ரெண்ட் பிரிட்ஜ் (ஜேம்ஸ் ஆண்டர்சன்) * இன்று