முதல் போட்டியிலேயே அதிர்ச்சி கொடுத்த பாகிஸ்தான்.

தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் தென் ஆபிரிக்க அணிக்கும் இடையிலான முதல் இருபதுக்கு இருபது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த பொடியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

முதலில் ஆடிய தென் ஆபிரிக்க அணி 188 ஓட்டங்கள் பெற்றது.

பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவையான நிலையில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி இருபதுக்கு இருபது போட்டிகளில் அதிக ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்த சாதனையையும் பெற்றுள்ளது.