முதல் போட்டியில் ஏன் இலங்கை தோற்றது- காரணத்தை விளக்கும் முரளிதரன்..!

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஏன் இலங்கை தோற்றது என்று காரணத்தை இலங்கையின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் விளக்கியுள்ளார்.
கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போதே முரளி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
ஆர் பிரேமதாச மைதானத்தில் முதலில் பேட் செய்ய வேண்டும். ஏனெனில் இது வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. பந்தின் தன்மையை ஒரே மாதிரியாக வைத்திருக்க இது ஒரு தடையாகும். எதிரணி நிச்சயமாக சோர்வடைவார்கள்.
அதைப் பயன்படுத்தி, பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களுக்கு செல்லலாம். நீங்கள் பெரிய ஓட்ட எண்ணிக்கை பெற்றதும் சாதகத்தை ஏற்படுத்தலாம் , இரவில் ஈரப்பதம் அதிகமாக இருக்காது. ”
“பின்னர் பந்து வீசுவது மற்றும் எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பது எளிது. முதல் போட்டியில், இந்திய அணி அழுத்தத்தை சந்தித்தது . முதல் 15 ஓவர்களில் நமது அணியினர் 90 ரன்கள் எடுத்தனர்.
நாங்கள் 50-60 ரன்களில் 2 அல்லது 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். ஆடுகளம் அவ்வளவு மாறாவிட்டால், நாம் முதலில் பேட்டிங் செய்வைத்து எப்போதும் சாதகமானது. ”