முன்னணி வீர்ர்களுக்கு ஓய்வு – தென்னாபிரிக்க தொடரில் இளம் வீர்ர்கள்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடருக்கான இடங்கள் மற்றும் அட்டவணையை உறுதி செய்தது.

ஐபிஎல் 2022க்குப் பிறகு 11 நாட்கள் கடந்து சொந்த மண்ணில் தொடர் தொடங்கும். இதற்கிடையில்,முன்னணி வீர்ர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட இந்திய அணியின் முக்கிய வீர்ர்களுக்கு பணிச்சுமையை (Work load) திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ஜூன் 9 முதல் 19 வரை ஐந்து நகரங்களில் ஐந்து டி20 சர்வதேசப் போட்டிகள் நடைபெறுகின்றன. அனைத்து வீரர்களும் போட்டி தொடர் முழுவதும் இருக்க மாட்டார்கள். சிலருக்கு அனைத்து ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு அளிக்கப்படலாம், மேலும் சிலர் சில போட்டிகளில் விளையாடலாம்” என்று BCCI வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வுக் காலம், தலைமை பயிற்சியாளருடன் (ராகுல் டிராவிட்டுடன்) பேசி தேர்வாளர்களால் முடிவு செய்யப்படும்” என்று BCCI வட்டாரம் மேலும் கூறியது.

ஐந்து டி20 போட்டிகளும் முறையே டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.