தில்ஹாரா லோகுஹெட்டிகே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று குற்றங்களில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் தில்ஹாரா லோகுஹெட்டிகே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் சுயாதீன ஊழல் தடுப்பு பிரிவினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

நேரடியாக ஆட்டநிர்ணய சதியுடன் இவர் தொடர்பு படவில்லையாயினும் அதனுடன் சம்மந்தப்பட்டமை மற்றும் ஆட்டநிர்ணய சதிகாரர்கள் தொடர்பு கொண்டமையை கிரிக்கெட் சபைக்கோ அல்லது ஊழல் தடுப்பு பிரிவுக்கோ வெளிப்படுத்தாமை ஆகியவற்றின் கீழ் இவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கான தடையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்த நிலையில், தடை தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.