முன்னாள் தலைவர்களை உடனடி கலந்துரையாடலை அழைக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் _மத்தியூஸ், சந்திமால், திரிமன்னே,திமுத்  ஆகியோரும் பங்கேற்பு…!

முன்னாள் தலைவர்களை உடனடி கலந்துரையாடலை அழைக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் _மத்தியூஸ், சந்திமால், திரிமன்னே,திமுத்  ஆகியோரும் பங்கேற்பு…!

இலங்கையின் விளையாட்டுத்துறை சம்பந்தமாகவும் கிரிக்கெட்டின் அடுத்த கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடுவதற்காக உடனடி அழைப்பு ஒன்று முன்னாள் தலைவர்கள் பலருக்கு விடுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த அழைப்பை விடுத்தஇருப்பதாக அறிய வருகிறது .

இலங்கை கிரிக்கெட் அணி மோசமான பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு முன்கொண்டு செல்லும் முயற்சியாக இந்த கலந்துரையாடல் இருக்கலாம் என நம்பப்படுகிறது .

வீரர்கள் பலர் ஒரு ஒப்பந்த இழுபறிக்குள்  சிக்குண்டு போயிருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் , வீரர்களுக்கும் இடையில் சுமூகமற்ற உறவு நிலமையும் காணப்படுகின்றது.

இது தொடர்பாக அண்மை நாட்களாக பலத்த வாதப் -பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சே இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் பலரையும் முன்னாள் தலைவர்களோடு, கிரிக்கெட் சார் அங்கத்தவர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கிறார்.

இந்த முக்கியமான கலந்துரையாடலில் அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், திரிமான்னே ,திமுத் கருணாரத்ன ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் அறியப்படுகிறது.

மஹேல ஜெயவர்தன, அரவிந்த டீ சில்வா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகஸ்தர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை 19ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் இடம்பெறவுள்ளது.