14வது ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் ஆரம்பித்துள்ளன, ஐ பி எல் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் மும்பை அணி தலைவர் ரோஹித் சர்மா விளையாடாத காரணத்தால் தலைவராக பொல்லார்ட் விளையாடினார்.
மும்பை சார்பில் ரோகித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா விளையாடவில்லை இவர்களுக்கு பதிலாக அன்மொல்பிரீட் சிங் மற்றும் சவ்ரவ் திவாரி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி தலைவர் தோனி முதலில் துடுப்பெடுத்தாட விருப்பம் வெளியிட்டார்.
பவர் பிளே ஓவர்களுக்குள்ளேயே சென்னை 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, பின்னர் இறுதியில் ருத்ராஜ் கெய்க்வாட் அதேபோன்று ஜடேஜா மற்றும் டிவைன் பிராவோ ஆகியோரின் அற்புத துடுப்பாட்ட துணையோடு சென்னை அணி 156 ஓட்டங்களை எட்டியமை குறிப்பிடத்தக்கது.
இந்த மைதானத்தில் இந்த ஓட்ட எண்ணிக்கை ஒரு பலமான ஒரு ஓட்ட எண்ணிக்கையாக பார்க்கப்பட்டது.
157 எனும் இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா இல்லாத காரணத்தால் குயின்டன் டி கொக், கிஷன் கிஷன் ஆகியோர் ஆரம்ப வீர்ர்களாக களமிறங்கினர்.
அதற்குப் பிறகு அறிமுக வீீரர் அன்மோல்பிரீத் சிங் ஆகிய வீரர்கள் கொஞ்சம் அதிரடி வெளிப்படுத்தினாலும்கூட தீபக் சஹர் உடைய அற்புதமான பந்து வீீச்சில் நிலைத்து துடுப்பெடுத்தாட அனுமதிக்கவில்லை .
இறுதியில் இடையிடையே விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியைத் தழுவியது.
சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான 32வது போட்டியாக இந்த போட்டி பார்க்கப்பட்டது, இதுவரைக்கும் மும்பை 19 வெற்றிகளையும் 13 வெற்றிகளை சென்னை அணியும் பெற்று உள்ளமை கவனிக்கத்தக்கது.
இதன் மூலமாக புள்ளி பட்டியலில் முன்நகர்ந்து இருப்பதோடு Play Off செல்வதற்கு இன்னும் குறைந்தது இரண்டு வெற்றிகளை பெற்று கொண்டாலே, சென்னை play off வாய்ப்பை உறுதிப்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு காணொளியைப் பாருங்கள் ???