மும்பைக்கு தொடரும் சோதனைகள் _ரோகித் வசம் 2 சாதனைகள்…!
15ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் ரோகித் சர்மா ஒரு புதிய சாதனை பட்டியலில் இணைந்தார் .
T20 கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தன் பெயரைப் பதிவு செய்தார்.
இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்,
சோயிப் மாலிக் (11698), கீரன் பொல்லார்ட் (11484), ஆரோன் பின்ச் (10499), விராட் கோலி (10379) மற்றும் டேவிட் வார்னர் (10373) ஆகியோரை தொடர்ந்து அதிக T20 ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் 7 வது வீர்ராகவும் 2 வது இந்தியராகவும் ரோகித் சர்மா சாதனை படைத்தார்.
இது மாத்திரமல்லாமல் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 500 பவுண்டரிகள் அடித்த சாதனை புரிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
20- 20 போட்டிகளில் 500 பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா இணைந்துகொண்டார் .
ஆக மொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளால் சோதனையில் தவழ ரோகித் சாதனைகளை பதிவு செய்கின்றார்.