எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் தமது அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பான அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக தானும் இஷான் கிஷானும் களமிறங்கப் போவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
27 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது