மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான கேப் டவுன் அணியில் ஆர்ச்சர்…!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள புதிய 20-20 லீக் கிரிக்கெட் போட்டியான SA20க்காக விளையாடும் MI கேப் டவுன் அணியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான MI கேப் டவுன் அணி, வைல்டு கார்டு முறையின் கீழ் ஆர்ச்சரை ஒப்பந்தம் செய்துள்ளது.

SA20 போட்டியில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. 27 வயதான ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக 17 மாதங்களாக கிரிக்கெட் மைதானத்தில் இருந்து விலகி இருந்தார்.

இருப்பினும், 2022 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில், மும்பை இந்தியன்ஸ் ஜோஃப்ரா ஆர்ச்சரை வாங்க முடிவு செய்திருந்த்து.

SA20 போட்டி ஜனவரி 10 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெற உள்ளது.

 

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇