மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய சுழல் பந்துவீச்சாளர் சேர்ப்பு…!

2022 ஐபிஎல் தொடரில் காயம் அடைந்த எம்டி. அர்ஷத் கானுக்கு பதிலாக குமார் கார்த்திகேயா சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைப்பு..!

ஐபிஎல் 2022 இன் எஞ்சிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக காயமடைந்த முகமது அர்ஷத் கானுக்குப் பதிலாக குமார் கார்த்திகேயா சிங்கை மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் மத்தியப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கார்த்திகேயா, இதுவரை 9 முதல் தர போட்டிகள், 19 List A போட்டிகள் மற்றும் 8 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். முறையே 35, 18 மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ₹20 லட்சத்திற்கு இணைவார்.

அர்ஷத் கான் காயம் அடைந்ததால், ஐபிஎல் தொடரில் அவர் விளையாடமாட்டார். சிங், மும்பை இந்தியன்ஸ் அணியில் பயிற்சிக் குழுவில் இருந்து வருகிறார், இப்போது 2022 சீசனுக்கான அணியில் சேர கையெழுத்திட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.