IPL போட்டிகளில் தவால் குல்கர்னி ஐபிஎல் 2022 இன் மீதமுள்ள போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தவால் குல்கர்னி ஐபிஎல் 2022 இன் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரின் வர்ணனைக் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்,
ஐந்து முறை சாம்பியன்களான மும்பையின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா 8 ஆட்டங்களில் 229 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்,
ஆனால் அவர் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த சீசனில் மோசமாக ஆடிவரும் நிலையில் குல்கர்னி மும்பை அணியில் மாற்றத்திற்கு காரணமாக இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
தவால் குல்கர்னி 92 IPL போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேநேரம் ஐபிஎல் 2022 இன் எஞ்சிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, காயமடைந்த முகமது அர்ஷத் கானுக்குப் பதிலாக குமார் கார்த்திகேயா சிங்கை மும்பை இந்தியன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே 8 ஆட்டங்களில் தோல்வியடைந்து பிளே-ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.