மும்பை இந்தியன்ஸ் VS RCB _ நீஷாம் ஓவரில் 28 ஓட்டங்களை விளாசிய மக்ஸ்வெல்..!

நியூசிலாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மக்ஸ்வெல் 31 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தார்.

14 .25 கோடிக்கு இம்முறை IPL ஏலத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இவரை ஏலத்தில் பெற்றுக்கொண்ட நிலையில் RCB ரசிகர்கள் இவருடைய அதிரடி காரணமாக கொண்டாடத்தில் இருக்கின்றனர்.

14.25 கோடிக்கு இம்முறை IPL ஏலத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுத்த நிலையில், வெறுமனே 50 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் ஜேம்ஸ் நீஷாமை ஏலத்தில் எடுத்தது.

கடந்த போட்டியில் மக்ஸ்வெல் சொதப்பவும், நீஷம் சிறப்பாக செயல்பட்டும் இருந்த நிலையில் வெளிவந்த விமர்சனங்களுக்கு மத்தியில், இப்போது மக்ஸ்வெல் தான் யார் என்பதை காட்டியுள்ளார் என்று RCB ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வீடியோ இணைப்பு.

 

 

மக்ஸ்வெல்லின் முழுமையான அதிரடி (வீடியோ )