மும்பை, சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியில் சாதனை புள்ளிவிபரங்கள்- நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

மும்பை, சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியில் சாதனை புள்ளிவிபரங்கள்- நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

14வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது கட்டப் போட்டிகள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாகின்றன.

ஐ பி எல்  இன் எல் கிளாசிகோ ஆட்டம் என அழைக்கப்படுகின்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில புள்ளி விபரங்களை உங்களுக்கு தொகுத்து தருகின்றோம்.

* துபாயில் 8 போட்டிகளில் 3 ல் மட்டுமே மும்பை வெற்றி பெற்றுள்ளது. மும்பைக்கு கிடைத்த 3 வெற்றிகளும் டெல்லிக்கு எதிராக பெறப்பட்டவையாகும்..

* CSK இதுவரை துபாயில் நடந்த 9 போட்டிகளில் 6 வெற்றி பெற்றுள்ளது.

* 100 -ஐபிஎல்லில் ஜஸ்பிரித் பும்ரா தனது 100 வது போட்டியில் விளையாடுவார். செப்டம்பர் 19 இன்று ட்வைன் பிராவோ எம்ஐக்கு எதிராக விளையாடினால், அவர் ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்காக தனது 100 வது போட்டியையும் விளையாடுவார்.

* 50 -க்ருனால் பாண்டியா 50 ஐபிஎல் விக்கெட்டுகளை எடுக்க இன்னும் 1 விக்கெட் தேவை. ஐபிஎல்லில் கிரான் பொல்லார்டுக்குப் பிறகு முப்பைக்காக 1000 ரன்களுக்கு மேல், மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2 வது ஆல்-ரவுண்டராக அவர் இருப்பார்.

* 20 -சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இன்னும் 1 ஆட்டத்தை வென்றால், ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அவர்கள் 2 வது மிக அதிகமான வெற்றிகளை (20) பெறுவார்கள்.

* ஐபிஎல்லில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள்:

* மும்பை – 22 வெற்றி கொல்கத்தா (28 போட்டிகள்)
கொல்கத்தா- 19 வெற்றி Vs பஞ்சாப் (28 போட்டிகள்)
முப்பை – 19 வெற்றி சென்னை (31 போட்டிகள்)
சென்னை – RCBக்கு எதிராக 17 வெற்றி (26 போட்டிகள்)
மும்பை – 17 வெற்றி ஆர்சிபி (28 போட்டிகள்)

* 3 -ரோஹித் சர்மா 400 டி20 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் ஆவதற்கு இன்னும் 3 சிக்ஸர்கள் தேவை.

* 1000 -இஷான் கிஷானுக்கு மும்பைக்காக 1000 ரன்களை எட்ட இன்னும் 35 ரன்கள் தேவை.

* 300 -எம்எஸ் தோனி, பேட்டிங் செய்யும்போது, ​​தனது 300 வது டி 20 இன்னிங்ஸை விளையாடுவார்.

* 150 -டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை எடுக்க ட்ரெண்ட் போல்ட்டுக்கு இன்னும் 1 விக்கெட் தேவை.