மும்பை ,சென்னை ,கொல்கத்தாவைத் தொடர்ந்து புதுவித சாதனை பட்டியலில் இணைந்த ஆர்சிபி ..!
15வது ஐபிஎல் போட்டி தொடர் இந்தியாவில் இடம்பெற்றுவருகிறது ,நேற்று இடம்பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் RCB அணிகளுக்கிடையிலான போட்டியில் தினேஸ் கார்த்திக்கின் அதிரடியில் மிகச் சிறப்பாக ஆர்சிபி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி பெற்றுக் கொண்ட இரண்டாவது வெற்றி இதுவாகும்.
இந்த நிலையில் RCB நேற்றைய போட்டியில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது,
ஐபிஎல் சாம்பியன்களான மும்பை ,சென்னை ,கொல்கத்தா ஆகிய அணிகளை தொடர்ந்து 100 வெற்றிகளைப் பெற்றுக் கொண்ட அணி எனும் சாதனை ஆர்சிபி வசமானது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் மும்பை (125) அடுத்த இடத்தில் சென்னையும்(117) , 3 வது இடத்தில் கொல்கத்தாவும் (109) இப்போது ஆர்சிபி நான்காவது அணி ஆகவும் இணைந்து கொண்டுள்ளது.