“முரளிதரனும், ரங்கன ஹேரத்தும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள். புதியவரின் திறமைக்கு பஞ்சமில்லை” – சுழற்பந்து பயிற்சியாளர் பியால் விஜேதுங்க..!

“முரளிதரனும், ரங்கன ஹேரத்தும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள். புதியவரின் திறமைக்கு பஞ்சமில்லை” – சுழற்பந்து பயிற்சியாளர் பியால் விஜேதுங்க..!

இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் அண்மையில் முடிவடைந்ததுடன், போட்டியின் வெற்றியை 3-2 என இலங்கை சுவீகரித்துள்ளது.

இதேவேளை, போட்டியின் பின்னர் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் பியல் விஜேதுங்க, இன்னும் 4/5 வருடங்களில் இலங்கை கிரிக்கெட்டில் மேலும் ஒரு முரளி மற்றும் ரங்கன இணைவார் என லசித் மலிங்கவின் யூடியூப் சேனலுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“முரளிதரனும் ரங்கன ஹேரத்தும் இப்படித்தான் ஆரம்பித்தார்கள். இப்போது அதே இடத்தில் புதியவர் ஒருவர் வந்திருக்கிறார். அவரின் திறமைக்கு பஞ்சமில்லை.

இன்னும் 4/5 வருடங்களில் இன்னொரு முரளி, ரங்கன நிச்சயம் உருவாகுவார்கள் என அறிமுக வீர்ர் வெல்லாலகே தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

19 வயதான அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு நேராக தேசிய அணிக்கு வந்தார். மார்வன் அதபத்து, மஹேல ஜயவர்தன போன்ற சில வீரர்களில் துனித் வெல்லாலகேவும் ஒருவர்.

ஆனால் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் ஆயினும் ஒரு நாள் அவர் அணிக்கு சிறந்த வீரராக இருப்பார் எனவும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் தொடரில் அறிமுகமான வெல்லாலகே மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் கருத்து பலிக்கட்டும் .