முரளியை சந்தித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் …!

முரளியை சந்தித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் …!

இலங்கை கிரிக்கெட் அணியின் 30 பேர் கொண்ட குழுவினர் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சந்தித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நிறுவிய கிரிக்கெட் கமிட்டியின் ஒரு அங்கத்தவராக பெயரிடப்பட்டிருந்தார்.

கிரிக்கெட்டில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வை அறிவித்துக்கொண்ட முத்தையா முரளிதரன் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை உடனான நேரடி தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் .

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முத்தையா முரளிதரன் நேற்றைய சந்திப்பில் பகிர்ந்து கொண்டதாக செய்திகள் வெளிவருகின்றன .

எதுவிதமான கருத்துக்கள் ஆலோசனைகள் அங்கே பகிரப்பட்டன என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை .

ஆயினும் இந்த சந்திப்பில் இலங்கை கிரிக்கெட்டின் முக்கியஸ்தர்கள் ,அணி முகாமையாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டதாகவும் அறியப்படுகிறது.