மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணி விபரத்தை வெளியிட்டார் விராட் கோலி..!

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணி விபரத்தை வெளியிட்டார் விராட் கோலி..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இறுதியாக லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நாளை(25) புதன்கிழமை லீட்ஸ்  மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கும் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் XI எவ்வாறு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் ஓட்டங்களை குவிப்பதற்கு அண்மைக்காலமாக தடுமாறி வருகின்றனர், இந்த நிலையில் இருவரையும் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுப்பெற்றாலும் லோட்ஸ் மைதானத்தில் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த தருணத்தில்,  நேர்த்தியான இணைப்பாட்டம் ஒன்றை இருவரும் கட்டி எழுப்பினர்.

அதைவிடவும் ரவீந்திர ஜடேஜா இறுதி 5 இன்னிங்ஸ்களில் எதுவிதமான விக்கெட்டுக்களையும் கைப்பற்றவில்லை ஆனால் துடுப்பாட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை நல்கிவருகின்றார்.

இதனால் அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் எனும் கருத்து வலுப்பெற்று இருக்கிறது, இது தொடர்பில் கோலி ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்.

அவரது கருத்தின்படி நாங்கள் லோர்ட்ஸ் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறோம்,  கடந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்கின்றபோது எங்கள் வெற்றிக் கூட்டணியில் எதுவித மாற்றமும் மேற்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்கு இல்லை.

ஆனால் மைதானத்தில் தன்மையைப் பொறுத்தும் நாங்கள் இறுதி அணியை தீர்மானிப்போம் எனவும் கோலிி தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக 12 இறுதிப்படுத்தப்பட்ட வீீரர்கள் உள்ளனர்,  மைதானத்தின் நிலைமையை பொறுத்து இறுதி முடிவு எட்டப்படும் எனவும் கோலிி தெரிவித்தார்.

குறிப்பாக மைதானத்தில் அதிகமாக புற்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன் ஆனால் மைதானத்தை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்கின்ற கருத்தை கோலி தெரிவித்தார்.

எது எவ்வாறாயினும் கோலி தெரிவித்திருக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்ற போது, அதிகமாக  அதே அணியாகவே விளையாடும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.