சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய தரநிலைகளின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலைமையில் காணப்படுகின்றமை ரசிகர்களுக்கு கவலையைக் கொடுத்திருக்கின்றது.
இன்று வெளியாகிய டெஸ்ட் போட்டிகளுக்கான தரநிலையில் இலங்கை அணி 8 வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது, இலங்கை அணியை அடுத்து பங்களாதேஷ், சிம்பாவே அணிகள் மட்டுமே காணப்படுகின்றன.
ஒருநாள் போட்டி தரநிலையில் இலங்கை 8 ம் இடத்திலும், இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை 9 ம் இடத்திலும் காணப்படுகின்றது.
அடிக்கடி தலைமைத்துவ மாற்றங்கள் மேற்கொண்டும் இலங்கை அணியை மீடடெடுக்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது, முன்னாள் சாம்பியன்களான இலங்கை அணி இவ்வாறு மோசமான நிலையில் காணப்படுகின்றமை ரசிகர்களுக்கு பெருத்த கவலையை உண்டுபண்ணியுள்ளது.
இலங்கை அணிக்கு இப்போது புதிய தலைவராக குசல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.