மெக்சிகோவை வெற்றிகொண்டும் அடுத்த சுற்று செல்ல தடுமாறும் அர்ஜன்டீனா – நிலைகள் பற்றிய அலசல்…!

கட்டாரில் இடம்பெற்ற வருகின்ற கால்பந்து உலகக் கிண்ண போட்டிகளில் இப்போது சூடு படித்திருக்கின்றன, நேற்று நள்ளிரவு இடம்பெற்ற மெக்சிகோ அடியுடனான போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோ அணியை 2-0 என்கின்ற அடிப்படையில் வெற்றி கொண்டிருந்தாலும் கூட, அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு இப்போது வரைக்கும் ஆர்ஜென்டீனாவுக்கு சந்தேக நிலையே தொடர்கிறது.

சிலவேளைகளில் அவர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லாமல் வெளியேற்றப்படும் அபாய நிலையும் இப்போதைய நிலையில் காணப்படுகிறது.

Poland 🇵🇱, FIFA2022

⚽️ போலந்து vs அர்ஜன்டீனா – அர்ஜன்டீனா வெற்றி பெற்றால் 👇

போலந்துக்கு எதிராக அர்ஜென்டினா வெற்றி பெற்றால், அவர்கள் ஆறு புள்ளிகளை அடைவார்கள், இது அவர்களுக்கு ரவுண்ட் ஆஃப் 16 இல் இடம் கிடைப்பதை உறுதிசெய்யும், ஆனால் அவர்கள் தோற்றால், அவர்கள் மூன்று போட்டிகள் முடிவில் மூன்று புள்ளிகளுடன் அவர்களது போட்டிகள் முடிவடையும்,

அர்ஜன்டீனா தோல்வியடைவதன் மூலம் 7 புள்ளிகளுடன் போலந்து முன்னேறி, குரூப் சியிலும் முதலிடத்தைப் பிடிக்கும். சமநிலை ஏற்பட்டாலும் போலந்து சந்தேகத்துக்கு இடமின்றி தகுதி பெறும், ஆனால் அர்ஜென்டினாவுக்கு விஷயம் சிக்கலானதாக மாறும், ஏனெனில் அவர்களின் விதி மெக்ஸிகோ மற்றும் சவுதி அரேபியா இடையேயான மற்றொரு குழு C போட்டியின் முடிவைப் பொறுத்ததாகவே அமையும்.

⚽️ சவுதி அரேபியா vs மெக்சிகோ – சவுதி அரேபியா வெற்றி பெற்றால் 👇

அந்த ஆட்டத்தில் சவுதி அரேபியா, மெக்சிகோவை வீழ்த்தினால் 6 புள்ளிகள் கிடைக்கும், 7 புள்ளிகளுடன் காணப்படும் போலந்துடன் சேர்ந்து சவுதி அரேபியா முன்னேறும், மேலும் அர்ஜென்டினா மூன்று ஆட்டங்களில் 4 புள்ளிகளுடன் வெளியேறும்.

⚽️ சவுதி அரேபியா vs மெக்சிகோ – மெக்சிகோ வெற்றி பெற்றால் 👇

சவுதியுடனான போட்டியில் மெக்சிகோ வெற்றி பெற்று ,போலந்துடனான போட்டியில் அர்ஜன்டீனா தோல்வியுற்றால் அர்ஜென்டினா , சவுதி அரேபியா, மெக்சிகோ ஆகிய அணிகளுக்கு தலா 3 புள்ளிகள் எனும் நிலமை உருவாகும், அப்போது கோல்கள் வித்தியாசத்தில் அர்ஜன்டீனா 2 வது அணியாக அடுத்த சுற்றுக்கு நுழைய வாய்ப்பு உருவாகும். இப்போதைய நிலையில் அர்ஜன்டீனா 3 கோல்கள் அடித்து 2 கோல்கள் வாங்கி +1 கோல் வித்தியாசத்தில் மற்றைய அணிகளை விடவும் முன்னிலையில் உள்ளது சிறப்பு.

மெக்சிகோ நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் சவுதி அரேபியாவை தோற்கடிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

⚽️ சவுதி அரேபியா vs மெக்சிகோ இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தால் 😋

சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோ இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்து அ்ர்ஜன்டீனா மற்றும் போலந்து அணிகளுடனான போட்டியும் டிராவில் முடிந்தால், சவுதி அரேபியாவுக்கு நான்கு புள்ளிகள் கிடைக்கும், நிலைமை கோல் வித்தியாசத்திற்கு வரும். மேலும் அர்ஜென்டினா ஒரு சிறந்த கோல் வித்தியாசத்தைக் கொண்டிருப்பதால், அது அவர்களுக்கு முன்னேற உதவும்.

ஆனால் அர்ஜென்டினா போலந்துடனான போட்டியில் தோற்றால் அவர்கள் மூன்று புள்ளிகளை மட்டுமே பெறுவார்கள், அதே நேரத்தில் மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியா போட்டியில் மெக்சிகோ தோல்வியை தவிர்த்தால் (போட்டி டிரா எனும் அடிப்படையில்) சவுதி நான்கு புள்ளிகளைப் பெறுவார்கள், மெக்சிகோ 2 புள்ளிகளைக் பெறுவார்கள், போலந்து 7 புள்ளிகள் என்று நிலமை வரும்போது போலந்து , சவுதி அரேபியா அடுத்த சுற்றுக்கு செல்லும் .

எனவே, ஃபிஃபா உலகக் கோப்பையில் மெக்சிகோவை வீழ்த்தி அர்ஜென்டினா தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தாலும், ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியின் போலந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்பதால் அவர்களால் நிம்மதியா இருக்க முடியாது என்பதே நிதர்சனமானது.

எது எவ்வாறாயினும் இந்த குழுவை பொறுத்தவரையில் ஆர்ஜெண்டினா அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பது தான் எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது, இந்த கேள்விக்கான பதிலை சுருக்கமாக சொல்வதாக இருந்தால் ஒன்றே ஒன்றுதான் அர்ஜடீனா தங்கள் கையில் இருக்கின்ற போலந்து அணியுடனான போட்டியை வெற்றிகொள்ள வேண்டும் , முடியாமல் போட்டி டிராவில் முடிவுற்றால் சவுதி மற்றும் மெக்சிகோ போட்டியில் சவுதி அரேபியா தோல்வியை தழுவ வேண்டும் என்று பிரார்தனைகளோடு காத்திருக்க வேண்டி ஏற்படலாம்.

தி.தரணிதரன்