மெஸ்ஸியின் சாதனையை முறியடித்த இந்திய அணித்தலைவர்…!

இந்திய கால்பந்து அணியின் தலைவரான சுனில் செட்டி , பிரபல கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் சாதனையை முறியடித்து சரித்திரம் படைத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸி 72 கோல்களுடன் காணப்பட்டார், இப்போது சுனில் செட்டி நேற்றைய நாளில் அடித்த 2 கோல்களுடன் தனது கோல்களின் எண்ணிக்கையை 74 ஆக உயர்த்தியுள்ளார்.

2022 கட்டார் உலக கிண்ண போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன, இந்த போட்டியில் நேற்று பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அடித்த 2 கோல்களுடன் மெஸ்ஸியை பின்தள்ளினார் சுனில் செட்டி. போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி 2-0  என்று வெற்றிகொண்டது.

 

 

 

இந்த பட்டியலில் ரொனால்டோ போர்த்துக்கல் அணிக்காக 103 கோள்கள் அடித்து முதலிடத்தில் காணப்படுகின்றார்.
சுனில் செட்டி 2 வது இடத்தில் காணப்பட, 3 வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அலி மஃபித்தும், 4 வது இடத்தில் ஆர்ஜன்டீனாவின் மெஸ்ஸியும் காணப்படுகின்றனர்.