மெஸ்ஸியில்லாத பார்சிலோனா லாலிகா வின் இரண்டாவது ஆட்டத்தை சமநிலையில் முடிந்தது …!
இந்த பருவத்திற்கான லா லிகா கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாகச் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நேற்றைய நாளில் இடம்பெற்ற Athletic Club மற்றும் பார்சிலோனா கழகங்களுக்கு இடையிலான போட்டி கடுமையான விறுவிறுப்பான ஆட்டமாக அமைந்திருந்தது.
மெஸ்ஸி இல்லாத நிலையில் இந்த பருவ காலத்தில் பார்சிலோனா விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் நேற்றைய போட்டியில் 1-0 பின்னிலையிலிருந்த பார்சிலோனாவிற்கு மெர்பிஸ் 75வது நிமிடத்தில் ஒரு அற்புதமான கோலை இடது காலால் தட்டிவிட, பார்சிலோனா 1-1 போட்டியில் சமநிலைக்கு வந்தது.
முழுவதுமான 90 நிமிடங்கள் நிறைவில் இரு அணிகளும் மேலதிக கோல்களையும் பெற்றுக் கொள்ளாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பார்சிலோனா இந்த பருவ காலத்தில் இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியும், ஒரு சமநிலையையும் (Draw) பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் நேற்று Athletic Club அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளமுடியாது இருந்தமை ரசிகர்களுக்கு ஏமாற்றம் எனலாம்.