மெஸ்ஸியில்லாமல் தொடர்ச்சியாக தடுமாறும் பார்சிலோனா -ஏங்கித் தவிக்கும் ரசிகர்கள் ..!
பிரபலமான கால்பந்து நட்சத்திரமான லயனல் மெஸ்ஸி அண்மையில் பார்சிலோனா கழகத்தில் இருந்து மாற்றலாகி பிசகி கழகத்துக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் பார்சிலோனா கழகம் மெஸ்ஸி இல்லாமல் மிகப்பெருமளவில் போட்டிகளை வெல்வதற்கு தடுமாறி வருகின்ற நிகழ்வை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
நேற்று இடம்பெற்ற அட்லெடிகோ மாட்ரிட் அணியுடனான லா லிகா போட்டியில் பார்சிலோனா 0_2 என தோல்வியை தழுவியது, பார்சிலோனா இதுவரைக்கும் சாம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது.
இதே நேரத்தில் பலம் பொருந்திய பார்சிலோனா கழகம், லா லிகா போட்டிகளிலும் கூட புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் காணப்படுவது ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது.
மெஸ்ஸி, நெய்மர், சுவாரஸ் இந்த மாதிரியான பிரபல நட்சத்திரங்கள் பார்சிலோனா கழகத்தை விட்டு பிரிந்த பின்னர், இப்போது வெற்றிகளுக்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் பார்சிலோனா உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லா லிகா போட்டிகளில் 3 வெற்றிகள், 3 சமநிலை, ஒரு தோல்வி அடங்கலாக 12 புள்ளிகளுடன் 9 வது இடத்தில் பார்சிலோனா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.