இங்கிலாந்தின் பிரிமியர் லீக் கழகமான மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடிவந்த 32 வயதான செர்ஜியோ அகியரோ பாரசிலோனா கழகத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ஜன்டீனா கால்பந்து கழகத்தின் முன்கள வீரரான செர்ஜியோ அகியரோ, அண்மையில் நிறைவுக்கு வந்த சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடியிருந்தார்.
அத்தோடு பிரிமியர் லீக் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணியின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த செர்ஜியோ அகியரோவை, லா லிகா அணியான பார்சிலோனா 100 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
10 ஆண்டுகளாக மான்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வந்த செர்ஜியோ அகியரோ,390 போட்டிகளில் 260 கோல்களை பெற்றுள்ளார்.
இதன் மூலமாக தனது நண்பரும் ஆர்ஜன்டீனிய தேசிய அணி வீரருமான மெஸ்ஸியுடன் கைகோர்க்கும் நிலைமை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.