மெஸ்ஸி இன் கைகளில் Copa America
சாம்பியன் ஆனது Argentina
Copa America 2021 இன் இறுதி போட்டி இல் இன்று Argentina மற்றும் Brazil அணிகள் மோதின.
Copa America 2021 முழுவதும் சிறப்பாக செயற்பட்ட Lionel Messi இறுதி போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே CONMEBOL ஆல் தொடர் நாயகனாக(Player of the Tournament) அறிவிக்கப்பட்டார்.
மெஸ்ஸி Copa America கிண்ணம் வெல்வதற்கான இறுதி வாய்ப்பான இத் தொடரை வென்று சர்வதேச போட்டிகளில் தனது முதலாவது கிண்ணம் வெல்ல களமிறங்கினார்.
இரு முன்னணி அணிகளும் தமக்கான வாய்ப்புக்களை உருவாக்கி கிண்ணத்தை வெல்ல கடுமையாக போராடின. போட்டியின். 21 ஆவது நிமிடத்தில் Di Maria இன் சிறப்பான ஆட்டத்தால் Argentina ஒரு கோலினைப் பெற்று ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதி 1-0 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது.
இரண்டாம் பாதியில் Brazil அணியின் ஆதிக்கமே அதிகமாக காணப்பட்டாலும் பிரேசில் இன் கோல் வாய்ப்புக்கள் முறியடிக்கப்பட்டன. இரண்டாம் பாதியின் இறுதியில் இரு அணிகளுக்கும் கோல் போடும் வாய்ப்புக்கள் கிடைத்தும் கோல் போட முடியாமல் போக ஆட்டம் Argentina அணிக்கு 1-0 என நிறைவடைந்தது.
இதன் மூலம் 15 ஆவது முறையாக Argentina Copa America கிண்ணம் வென்று அசத்தியது. Lionel Messi 3 முறை Copa America இறுதி போட்டியில் தோல்வி அடைந்து 4 ஆம் முறை Copa America கிண்ணத்தை வென்று சாதனை படைத்தார். அத்துடன் 1993 இன் பின்னர் Argentina வெல்லும் முதல் கிண்ணம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
Messi Copa America 2021 இன் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.