மெஸ்ஸி இல்லாது லா லிகா பருவத்தை வெற்றியோடு ஆரம்பித்தது பார்சிலோனா..! 4-2 என அபார வெற்றி.
கால்பந்து உலகில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்த பருவத்திற்கான கால்பந்து திருவிழா போட்டிகள் ஆரம்பித்திருக்கின்றன.
பிரீமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகள் ஒரு பக்கம், லா லிகா கால்பந்தாட்ட போட்டிகள் ஒரு பக்கம் என ரசிகர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பார்சிலோனா கழகத்திலிருந்து பிரபலமான வீரர் லயோனல் மெஸ்சி விடைபெற்றதைத் தொடர்ந்து பார்சிலோனா விளையாடிய உத்தியோகபூர்வமான முதலாவது ஆட்டம் வெற்றியில் முடிந்துள்ளது.
மெஸ்ஸி இல்லாமல் தொடங்கிய முதலாவது ஆட்டமாக ரியல் சொசைடாட் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டம் அமைந்திருந்தது.
பார்சிலோனாவில் மெஸ்ஸி இல்லாத நிலையில் ரசிகர்கள் இந்த ஆட்டத்தை பெருமளவில் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க ப்ரைத்வைட் இந்த போட்டியில் இரண்டு கோல்களை அடிக்க மிக அபாரமான முறையில் 4-2 என்று பார்சிலோனா இந்த போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்தது.
லா லிகா தொடரை மிக அபாரமாக பார்சிலோனா ஆரம்பித்திருக்கிறது, மெஸ்ஸி இல்லாவிட்டாலும் இந்த வெற்றி பார்சிலோனா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்சியை கொடுத்திருக்கிறது.
முழு நேரம்
பார்சிலோனா 4
ரியல் சொசைடாட் 2
ப்ரைத்வைட் ⚽️⚽️
Pique⚽️
ராபர்டோ ⚽️
அனைத்து பார்கா ரசிகர்களும் வாழ்த்துக்கள் ✊️✊️❤️