மெஹிதி ஹசன் கன்னிச்சதம்; வங்கதேசம் முன்னிலையில்..!!!

பங்களாதாஷிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதாஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, சிட்டஹொங்கில் நடைபெற்று வருகின்றது.

நாணயச்சுழற்சியில் வென்று முதல் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 430 ஓட்டங்களைப் பெற்றது.

கன்னிச்சதம் கடந்த மெஹிதி ஹசன் 102 ஓட்டங்களைக் குவிக்க, சஹிப் அல் ஹசன் 68 ஓட்டங்களைப் பெற்றார். மேற்கிந்தியாவின் வொறிக்கன் 4 இலக்குக்களைக் கைப்பற்றினார்.

பதிலளித்து ஆடி வரும் மேற்கிந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இரண்டு இலக்குக்களை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றுள்ளது