மேற்கிந்தியத் தீவுகளின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக ரமேஷ் சுபசிங்க நியமனம்…!

மேற்கிந்தியத் தீவுகளின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ரமேஷ் சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மிகவும் விரிவான மற்றும் துல்லியமான முறைமையின் கீழ் இந்த தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மேற்கிந்திய கிரிக்கெட் விளையாட்டின் செயல்திறன் மற்றும் ஊக்குவிப்புக்கான புதிய யுகத்திற்கு நாட்டின் கிரிக்கெட் அகாடமியை கொண்டு செல்வதற்கு மிகவும் பொருத்தமான நபராக ரமேஷ் சுபசிங்கவை கிரிக்கெட் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த நிலையில் வரும் மே 1ம் தேதி முதல் அவர் பணியை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கிந்திய கிரிக்கெட் அகாடமிக்கு சர்வதேச பயிற்சியாளர்களிடம் இருந்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 53 விண்ணப்பங்கள் வந்துள்ளன.12 சிறந்த பயிற்சியாளர் பட்டியலில் இடம்பிடித்த சுபாசிங்கே, பின்னர் கடைசி 6 பேரின் தேர்வுப்பட்டியலில் ஜமைக்காவின் கயானாவில் இருந்து பல வலிமையான பயிற்சியாளர்களை முந்தி தேர்வாகியுள்ளார்.