மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுத்தது இலங்கை ..!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபது20 போட்டியில் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்தது .
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தனுஷ்க குணதிலக ,பத்தும் நிசங்க ஆகியோர் ஆரம்ப விக்கட்டுக்காக 95 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டனர் .
இதன் மூலமாக 160 ஓட்டங்களை இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை கைப்பற்றினர் .
43 ஓட்டங்களால் இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒன்றுக்கு -ஒன்று என்ற நிலைக்கு தொடர் வந்துள்ளது.