மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது இருபது20 போட்டியில் வென்றது பாகிஸ்தான்

மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது இருபது20 போட்டியில் வென்றது பாகிஸ்தான்

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 2-வது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி போராட்டத்திற்கு மத்தியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது போட்டி விறுவிறுப்பான ஆட்டமாக அமைந்தது.

போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் அமோகமாக இருந்தாலும் பின்னர் வந்த வீரர்கள் சரியாக ஆடாத நிலையில் 157 ஓட்டங்களை மட்டுமே தான் பெற்றுக்கொண்டு.

158 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி  ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதி ஐந்து ஓவர்களில் மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு 74 ஓட்டங்கள் தேவையாக இருந்தது, ஆடுகளத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நிக்கோலஸ் பூரன் மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார் என எல்லோரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

இறுதி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஷஹீன் ஷா அஃப்ரிடியின் பந்தை எதிர்கொண்ட பூரானால் ஓட்டங்களைப் பெற முடியாது போனதன் விளைவாகவே பாகிஸ்தான் அபாரமான வெற்றியை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பைற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.