மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது ஆஸி…!

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற பகலிரவு முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று வென்றது.

முதலில்துடுப்படுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 27வது ஓவரில் 123 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டன் கிரன் பொலார்டு மட்டுமே 57 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 56 ரன்கள் அடித்தார்.

இலக்கை விரட்டும் போது மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் (3/11) அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார , இதில் லூயிஸ், ஹெட்மையர், ஜேசன் மொகமது, டேரன் பிராவோ, நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர் ‘

முதல் பந்திலேயே எவின் லூயிஸை தாழ்வான ரிடர்ன் கேட்சில் வெளியேற்றினார். பிறகு ஜேசன் மொகமதுக்கு அச்சமூட்டும் இன்ஸ்விங்கர் ஃபுல் பந்தை வீசினார் அவர்
பொலார்டு எதிர்த்தாக்குதல் நடத்தினார் ஆடம் ஜாம்பாவை வெளுத்தார், அல்ஜாரி ஜோசப் ஸ்டேண்ட் கொடுத்தார். ஜோசப்பை மிட்செல் மார்ஷ் பவுல்டு செய்தார்.

ஸ்டார்க் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இது ஒருநாள்கிரிக்கெட்டில் அவரது 8வது 5 விக்கெட்டாகும்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் அறிமுக தொடக்க வீரர்களான ஜோஷ் பிலிப், பென் மெக்டர்மாட் இணைந்து 11 ஓவர்களில் 51 என்ற சுமாரான தொடக்கத்தைக் கொடுத்தனர், பிட்ச் கடினமான பிட்ச். மிட்செல் மார்ஷ் 20-ல் வெளியேற. மோய்சஸ் ஹென்றிக்ஸ் 7 ரன்களில் பெவிலியன் திரும்ப பென் மெக்டர்மட் 28 ரன்களில் ஜோசப் பந்தில் காலியானார். 114/4 என்று ஆஸ்திரேலியா ஜோசப், ஹுசைன் பந்து வீச்சில் திணறியது, அப்போது கேப்டன் அலெக்ஸ் கேரி (67), ஆஷ்டன் டர்னர் (49) 114 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்ததால் ஆஸ்திரேலியா 252 ரன்களை எட்டியது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் மிட்செல் ஸ்டார்க். தேர்வு செய்யப்பட்டார்.

#ABDH