மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர் வந்த திடீர் சோதனை_ போட்டி ரத்து ..!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
போட்டி ஆரம்பமாவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்த நிலையில், கொரோனா தொற்றுடையவர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வெளியானதை அடுத்து, உடனடியாக வீரர்கள் தங்கள் ஓய்வு அறைகளுக்கு அழைக்கப்பட்டு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டமை இதற்கான காரணம் எனவும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலிய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் மெடரித்துக்கு அறிமுகம் கொடுக்கப்பட்டு, அணித்தலைவர் ஆரோன் பின்ச் கைகளால் அவருக்கு அறிமுக தொப்பியும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயினும்கூட அவருக்கான அறிமுகப் போட்டியில் விளையாடப் படாமலே துரதிஷ்டவசமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
முதலாவது ஒருநாள் போட்டியில் ஸ்டார்கின் மிக அற்புதமான பந்து வீச்சு காரணமாக 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளவையும் கவனிக்கத்தக்கது.
வருகின்ற சனிக்கிழமை மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இடம்பெறவிருக்கும் நிலையில், இந்த சர்ச்சைக்குரிய கொரோனா தொற்றுடையவர் கண்டுபிடிக்கப்பட்டமையால் போட்டி நடைபெறுமா இல்லையா என்பது இதுவரைக்கும் திட்டவட்டமாக தெரியாத ஒரு விடயமாகவே இருக்கிறது.