மேற்கிந்திய தீவுகள் பயணப்பட்ட இலங்கையின் டெஸ்ட் அணி..!

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் விளையாடிவரும் இலங்கை அணி T20 தொடரை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது.
தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியது.

இந்தநிலையில் மேற்கிந்திய தீவுகளில் விளையாடிவரும் இலங்கை வீரர்கள் தவிர, டெஸ்ட் குழாமில் இடம்பிடித்த இன்னும் சில வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் நோக்கி நேற்று பயணப்பட்டுள்ளனர்.

லஹிரு திரிமான்ன, தனஞ்சய டீ சில்வா, ரோஷன் சில்வா, விஷ்வா பெர்னாண்டோ ,லசித் எம்புல்தேனிய ஆகிய வீரர்களே நேற்றைய நாளில் மேற்கிந்திய தீவுகள் நோக்கி பயணப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது டெஸ்ட் தொடர் எதிர்வரும் மார்ச் 21 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.