மேலதிக துடுப்பாட்ட பலத்துடன் களம் காணும் இலங்கை அணி- நாணய சுழற்சி நிறைவு.

மேலதிக துடுப்பாட்ட பலத்துடன் களம் காணும் இலங்கை அணி- நாணய சுழற்சி நிறைவு.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 2 வது ஒருநாள் போட்டி ஆரம்பித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியுள்ளார்.

கடந்த போட்டியில் உபாதை காரணமாக விளையாடாத அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்சய டீ சில்வா ஆகியோர் இன்றைய போட்டியில் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

முதல் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.