ஒருவருடைய வாழ்க்கை எப்போது எப்பிடி மாறும் என்பது எவருக்குமே தெரியாதது, ஆண்டவன் பெயர் ,புகழ் எல்லாவற்றையும் அள்ளி அள்ளி கொடுத்துவிட்டு ஒருகட்டத்தில் ஓரமாய் உட்கார்ந்து ஓய்வெடு என்று எங்களை உட்காரவைத்துவிடுவார்.
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
எல்லாம் ஒரே நொடிப்பொழுதில் நம்மை கொன்று விடும்.
மைக்கேல் ஷூமேக்கர் -பிரபல கார்பந்தய வீரர்.
Formula 1
கார்பந்தயத்தில் இப்போது முடிசூடா மன்னனாக திகழும் லூயிஸ் ஹாமில்டன் , மைக்கல் ஷூமேக்கரின் உலக சாதனையான 7 Title சாதனையை கடந்த நவமபர் மாதம் ஹாமில்டன் சமன் செய்தார்.

Formula 1
கார்பந்தயம் என்றால் எல்லோரும் அறிந்திருந்த ஒரு பெயர்தான் மைக்கேல் ஷூமேக்கர்.

இவருடைய வாழ்வில் எத்தனையோ கார்
பந்தயங்களில் கலந்து கொண்டார், ஆனால் அங்கெல்லாம் வாழ்வை முடக்கி போடும் பாரியளவான விபத்துக்களோ , உடல் உபாதைகளோ இல்லாமல் வலம்வந்த ஒரு சாதனை நாயகனை வெறும் பனிச்சறுக்கல் முடக்கி போட்டதுதான் உலகமகா வேதனை என்பேன்.

விபத்து
2013 ஆம் ஆண்டில் பிரெஞ்ச் ஆல்ப்ஸில் நடந்த பனிச்சறுக்கு
விளையாட்டில் குடும்பத்தினருடன் குதூகலமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மைக்கேல் ஷூமேக்கர், எதிர்பாராதா விபத்தில் சிக்கி அவருக்கு மூளைக் காயம் ஏற்பட்டதுடன் கோமா நிலைக்கு ஆளாகினார்.
விளையாட்டில் குடும்பத்தினருடன் குதூகலமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மைக்கேல் ஷூமேக்கர், எதிர்பாராதா விபத்தில் சிக்கி அவருக்கு மூளைக் காயம் ஏற்பட்டதுடன் கோமா நிலைக்கு ஆளாகினார்.
அன்றிலிருந்து இன்றுவரை 8 ஆண்டுகளாக அவரது உடல்நிலை என்னவென்று ரசிகர்கள் அறிய ஆவல் கொண்டிருந்தாலும் அவ்வளவு பெரிதாக அவரது உடல்நிலை குறித்த செய்திகள் வெளியில் கசிவதில்லை.
இப்போது அவரது வாழ்க்கை வரலாறை ஆவணப்படமாக்கும் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது எனும் செய்தி வந்திருக்கிறது.
மைக்கேல் ஷூமேக்கரின் வாழ்க்கை குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆவணப்படத்தில் அவரது குடும்பத்தினரால் வழங்கப்பட்ட தனிப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதுடன் இன்னும் படம் மெருகேற்றப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
2019 வெளியீட்டு திகதியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட இந்த ஆவணப்படம், அவரது குடும்பத்தினரது பிரத்தியேக சேர்ப்புக்களுக்காக சிறிது பிற்போடப்பட்டு , மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தாமதமாகி இப்போது திரைக்கு வரதயாராகிவிட்டது.
ஷூமேக்கரின் வளர்ச்சி , அவரது சாம்பியன்ஷிப் பட்டங்கள் மற்றும் அவர் விபத்துக்குள்ளான விதம் குறித்து ஆவணப்படம் சிலவற்றை விளக்கும் என்று நம்பப்படுகின்றது.
ஏழு முறை உலக சாம்பியனான மைக்கேல் ஷூமேக்கர் , அவரது மனைவி கொரின்னா, மகன் மிக் ஷூமேக்கர், மகள் ஜினா-மேரி மற்றும் தந்தை ரோல்ஃப் ஆகியோர் இந்த வணப்படத்தில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆவணப்படம் வெளியாவதற்கு முன்னர் குடும்பத்தாரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனும் நிபந்தனையின் அடிப்படையிலேயே ஷூமேக்கரது குடும்பத்தார் சில பிரத்தியேக காணொளி சேர்க்கைகளை வழங்கியுள்ளனர்.
இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வனேசா நோக்கர் ஜெர்மன் எக்ஸ்பிரஸிடம் படம் திருப்தியாக நிறைவுக்குவந்துள்ளதாக கூறினார்.
கொரோனா காரணமாக எப்போது படம் வெளிவரும் என்று உறுதியாக கூறமுடியாவிட்டாலும், கொஞ்சம் பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“மைக்கேல் ஷூமேக்கரின் குடும்பம் மற்றும் நிர்வாகத்தின் நம்பகமான ஒத்துழைப்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் இந்த படம் சாத்தியமில்லை.” என்று உதவி இயக்குனர் பெஞ்சமின் சீகல் கூறியுள்ளார்.
மைக்கல் ஷூமேக்கரின் 21 வயதான மகன் மிக் ஷூமேக்கர் மார்ச் மாதத்தில் ஃபார்முலா 1 கார்பந்தயத்தில் தன் தந்தையை அடியொற்றி அறிமுகமாகவுள்ள நிலையில், மார்ச் மாதத்துக்கு பின்னர் படத்தை எதிர்பார்க்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
ஒரு சாதனை நாயகனை வாழ்க்கை எப்படி மாற்றிப்போட்டு வீட்டுக்குள் முடக்கியிருக்கிறது என்பதற்கு மைக்கல் ஷூமேக்கர் மிகப்பெரிய உதாரணம்.
உலக வாழ்வில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நமக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதை நினைத்து நினைத்தே நம் நிம்மதியை பறிகொடுக்காமல் அப்படியே நகர்ந்து செல்வதுதான் வெற்றிக்கான ஒரே வழி.
வாழ்க்கையில் பெயர் ,புகழ் எல்லாவற்றையும் கொடுத்து அழகுபார்த்த ஆண்டவன் மைக்கல் ஷூமேக்கரை வலி நிறைந்த வாழ்க்கையோடு வாழவைத்திருக்கிறார் என்பதுதான் வேதனையானது.
“அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையை தான் பூட்டி வைக்கிறான்”
இந்த வரிகள் மைக்கல் ஷூமேக்கருக்கு பொருத்தமில்லையாயினும் ஏதோவொன்றை நமக்கு சொல்லிப்போகிறது.
மைக்கல் ஷூமேக்கருக்கு இப்போதுதான் வயது 52
மீண்டுவரட்டும் தன் பிள்ளையின் வெற்றிகளை ரசிக்கவும் +ருசிக்கவும்.

(FB Post)
