மைதானத்தில் அழுத இளம் சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பரிசளித்த தோனி

மைதானத்தில் அழுத இளம் சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பரிசளித்த தோனி

டெல்லியுடனான முதல் ப்ளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றியைக் கண்டு அழுத இளம் சிஎஸ்கே ரசிகர்களுக்குத் தான் கையெழுத்திட்ட பந்துகளை தோனி பரிசாக வழங்கினார்.

கிரேட் ஃபினிஷர் கேப்டன் தோனியின் மிரட்டலான ஆட்டம், உத்தப்பா, கெய்க்வாட் பேட்டிங் ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

அப்போது சிஎஸ்கேவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இளம் சிஎஸ்கே ரசிகர்கள் இருவர் மைதானத்தில் அழத் தொடங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து அவ்விருவருக்கும் தான் கையெழுத்திட்ட பந்துகளைப் போட்டி முடிந்த பின்னர் தோனி பரிசாக வழங்கினார்.

#ABDH

Previous articleLPL வரைவுக்கு பதிவு செய்யப்பட்ட 74 வெளிநாட்டு வீரர்களின் பெயர் விபரம்…!
Next articleஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியல் விபரம்…!