மைதானத்தில் முறைகேடாக நடந்த சாஹிப் அல் ஹசன் (வீடியோ இணைப்பு)

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான சாஹிப் அல் ஹசன், உள்ளூரில் இடம்பெற்ற போட்டியொன்றில் முறைகேடாக நடந்துகொண்டு ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார்.

ஆட்டமிழப்பு ஒன்றுக்காக நடுவரிடம் முறையிட்ட சாஹிப் அல் ஹசன், நடுவர் அதனை வழங்கவில்லை என்பதற்காக விக்கெட்டுக்களை காலால் அடித்து தட்டிவிட்டு சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட வீரர் முஷ்பிகுர் ரஹீமுக்கான ஆட்டமிழப்பை கோரியே சாகிப் அல் ஹசன் இவ்வாறு நடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நீண்டகாலமாக கிரிக்கெட் ஆடிவரும் சாஹிப் அல் ஹசன், இவ்வாறு நடந்துகொள்கின்றமை ரசிகர்களுக்கு கவலையை தோற்றுவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வீடியோ இணைப்பு.