மைதானத்தில் வித்தியாசமான டான்ஸ் ஆடிய வோர்னர்- வைரல் வீடியோ…!

பாகிஸ்தானில் வித்தியாசமான டான்ஸ் ஆடிய வோர்னர்- வைரல் வீடியோ…!

பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

ஆடுகளம் முற்றுமுழுதாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 476 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 459 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பதிலுக்கு 2 வது இன்னிங்க்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் சேர்த்த நிலையில் போட்டி Draw இல் நிறைவானது.

இந்த போட்டியில் விறுவிறுப்பு இல்லாமல் செல்ல மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனால் ரசிகர்களை குஷிப்படுத்த வார்னர் மைதானத்தில் வித்தியாசமான டான்ஸ் ஆடினார் . வார்னரின் இந்த ஆட்டத்தை கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இன்றைய இந்த வோர்னரின் இந்த டான்ஸ் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

டிக் டாக் மூலமாக அதிகளவு பேசப்பட்டிருந்த டேவிட் வார்னர் ,இப்போது பாகிஸ்தான் ,அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின்போது ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது.