மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்படோஸில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஒரு விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
போட்டியில் Free Hit வழங்கப்பட்ட போது களத்தடுப்பில் மாற்றம் மேற்கொண்டதற்காக மேற்கிந்திய தீவுகள் 10 வீரர்களோடு களத்தடுப்பு செய்த சுவாரஸ்யமான சம்பவம் பதிவானது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 57-6 ஆக தடுமாறிக் கொண்டிருந்தபோது, மேற்கத்திய தீவுகளின் அகீல் ஹொசைன் 17 வது ஓவரைத் வீசத்தொடங்கினார்,
களத்தடுப்பு வீரர்கள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களான மத்தியூ வேட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு நெருக்கமாக களத்தடுப்பில் நிறுத்தப்பட்டனர்.
அனுமதிக்கப்பட்டதை விட உள் வட்டத்திற்கு வெளியே அதிகமான பீல்டர்கள் இருப்பதாக Square Leg நடுவர் குறிப்பிட்ட பிறகு குறித்த ஓவரின் இரண்டாவது பந்து வீச்சை மீண்டும் வீச வேண்டியிருந்தது.
ஒரு ஃப்ரீ-ஹிட் சமிக்ஞை செய்யப்பட்ட நிலையில், Short Leg பகுதியில் களத்தடுப்பில் நின்று கொண்டிருந்த பொல்லார்ட் எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
ஃப்ரீ-ஹிட்டின் விதிகள்படி களத்தடுப்பு நிலைகளை மாற்ற முடியாது என்று எனும் விதி காணப்படுகின்றது, ஆகையால் குறித்த Short Leg பகுதியில் களத்தடுப்பில் நின்றுகொண்டிருந்த பொல்லார்ட், அங்கே நிற்க விரும்பாமல் மைதானத்துக்கு வெளியில் நின்று வேடிக்கை பார்த்தார். மேற்கிந்திய தீவுகள் 10 வீரர்களுடன் களத்தடுப்பு செய்யும் நிலையை உருவாக்கியது .
போட்டியில் ஆஸ்திரேலியா 187 ரன்களைக் குவிக்க முடிந்தது, ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
தவறு செய்கின்ற வீரர் ஒருவரை சிகப்பு அட்டை (Red Card) காண்பித்து மைதானத்தை விட்டு வெளியேறுகின்ற நிகழ்வு கால்பந்தாட்டத்தில் பார்த்திருக்கின்றோம். இப்படியான சந்தர்ப்பத்தில் 11 வீரர்கள் விளையாடும் கால்பந்தாட்டத்தில் 10 வீரர்களாக குறைக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன .
ஆனால் கிரிக்கெட்டில் 10 வீரர்களோடு ஒரு போட்டி விளையாடிய நிகழ்வும் இந்த சம்பவத்தின் மூலமாக பதிவானது.
முழுமையான வீடியோவை பாருங்கள்
— Thillaiyampalam Tharaneetharan (@tharanee_sports) July 26, 2021