மொயின் அலி ஏன் இந்த திடீர் முடிவு- இங்கிலாந்துக்கு குட்பாய் சொன்னார்..!

மொயின் அலி ஏன் இந்த திடீர் முடிவு- இங்கிலாந்துக்கு குட்பாய் சொன்னார்..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான 34 வயதான மொயின் அலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடைகொடுப்பதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் மிகச் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களுள் ஒருவராக மொயின் அலி தகழ்ந்துவருகிறார்.

ஜோஸ் பட்லர் விலகிக்கொள்ள உதவித் தலைவராகவும் இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது செயல்பட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

2000 ஓட்டங்கள்,100 விக்கெட்டுகளை கைப்பற்றிய உலகின் 15 வீரர்களில் ஒருவராக மிகப்பெரிய சாதனையையும் மவயின் அலி படைத்தார்.

3000 ஓட்டங்களையும் 300 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சாதனையையும் எட்டுவதற்கு இன்னும் ஒரு சில ஓட்டங்களும், விக்கெட்டுக்களும் தேவைப்படும் நிலையில் திடீரென இந்த முடிவை அறிவித்துள்ளார்.

64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மொய்ன் அலி, 2914 ஓட்டங்களையும் 195 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அடுத்து ஐசிசி T20 உலக கிண்ணம் , ஆசஸ் என்று நெருக்கமான தொடர்கள் வரும் நிலையில் தனக்கு நெருக்கடியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆயினும் கவுண்டி கிரிக்கெட், பிரான்ஷைஸ் கிரிக்கெட் விளையாடுவதுடன் இங்கிலாந்தின் ஒருநாள், T20 போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட ஆவலாக இருப்பதாகவும் மொயின் அலி அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து தேசிய டெஸ்ட் அணியில் தொடர்ச்சியான இடத்தை தக்க வைப்பதற்கு அலி தடுமாறினாலும், இதுவரை சிறந்த கலதுறைறவீரராக திகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இலக்கம் தொடக்கம் 9 ஆம் இலக்கம் வரை அனைத்துப் நிலைகளிலும் மொயின் அலி துடுப்பாட்ட பங்களிப்பை வழங்கியுள்ளார்.