மொயீன் அலி அபாரம் – வெஸ்ட் இண்டீசை 34 ரன்னில் வீழ்த்தியது இங்கிலாந்து

மொயீன் அலி அபாரம் – வெஸ்ட் இண்டீசை 34 ரன்னில் வீழ்த்தியது இங்கிலாந்து

வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி பார்படாசில் இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. கேப்டன் மொயீன் அலி அதிரடியாக ஆடி 28 பந்தில் 63 ரன்னும், ஜேசன் ராய் 52 ரன்னும், வின்ஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெசன் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 34 ரன்னில் வெற்றி பெற்றது.

கைல் மேயர்ஸ் 40 ரன்னும், ஹோல்டர் 36 ரன்னும் எடுத்தனர். கடந்த போட்டியில் சதமடித்த பொவெல் 5 ரன்னில் அவுட்டானார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலையில் உள்ளது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

#Abdh