“யார்ரா நீ ,எங்க இருந்துடா உன்ன பிடிச்சாங்க” ஷர்துல் தாகூரிடம் தமிழில் கேட்ட அஷ்வின்_ வைரல் வீடியோ..!
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது, 27 ஓட்டங்களால் பின்நிலையிலிருந்த இந்திய அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ஓட்டங்களையும் தென்னாபிரிக்கா 229 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.
ஒரு கட்டத்தில் 100 ஓட்டங்களுக்குள் ஒரு விக்கெட் எனும் வலுவான நிலையில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிவதற்கு காரணமானவர் ஷர்துல் தாகூர்.
இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகளை சாய்த்தார் ,அவர் தனது நான்காவது விக்கெட்டை கைப்பற்றிய போது அவரை நோக்கி பாராட்டும் விதமாக ,யார்ரா நீ உன்ன எங்க இருந்துடா புடிச்சாங்க , அப்படின்னு அஷ்வின் தமிழில் பேசிக் கொண்டே ஷர்துல் தாகூரை பாராட்டிய அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
வீடியோ இணைப்பு.
Just was about to tag you?? pic.twitter.com/WGf0WEL0dP
— Jacob Richard (@jacobrich07) January 4, 2022