யார் இந்த உம்ரன்_மலிக் – நடராஜன் காட்டிய வழியில் மிரட்டுகிறான்..!

யார் இந்த உம்ரன்_மலிக் – நடராஜன் காட்டிய வழியில் மிரட்டுகிறான்..!

ஜம்மு காஷ்மீரில் பிறந்த உம்ரன் மலிக் சிறு வயதிலேயே கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயதில் இருந்தே தன்னை உலகத்தை மிரட்டும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும் என தன்னை தயார் படுத்திக் கொண்டார்.

அப்பொழுது யாருக்கும் தெரியாது இவன் உலகத்தை மிரட்டும் வேகப்பந்து வீச்சாளனாக வருவான் என்று.

சிறு சிறு கழக மட்ட போட்டிகளில் விளையாடுகிறான். ஆனாலும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தொடர்ந்து முயல்கின்றான்.

தொடர் தோல்விகளால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐ.பி.எல் இருந்து வெளியேற்றப்படுகிறது. இருப்பினும் 03 போட்டிகள் மீதம் இருக்கின்றன. சன்தீப் சர்மாவிற்கு பதிலாக ஒரு இளம் வேகப்புயலை அணிக்குள்ளே கொண்டு வரலாம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முடிவொன்றை எடுக்கிறது.

பல காத்திருப்பிற்கு பின்னர்
உம்ரன் மலிக்குக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முதல் போட்டி கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன். போட்டியின் 06வது ஓவர் வில்லியம்சனினால் உம்ரன் மலிக்குக்கு வழங்கப்படுகிறது. முதல் ஓவரின் பதற்றம் & பரபரப்பு ஏற்படுகிறது. எனினும்
முதல் பந்தே 143Kmh
இரண்டாவது பந்து 147Kmh
மூன்றாவது பந்து. 145Kmh
நான்காவது பந்து. 146Kmh
ஐந்தாவது பந்து. 148Kmh
ஆறாவது பந்து. 150.9Kmh

ஆறாவது பந்திலே இந்த ஐ.பி.எல் சீசனில் இந்திய வீரர் வீசிய அதிவேக பந்து (150Kmh) என்ற சாதனையை நிலைநாட்டுகின்றான்.

அந்த போட்டியில் 03 ஓவர் பந்து வீசி 10 ஓட்டங்களை மட்டுமே விட்டு கொடுக்கிறான்.

அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைகிறது. எனினும் பல மக்களின் மனதில் அன்றே உம்ரன்_மலிக் எனும் பெயர் ஆழமாக வேரூன்றிவிட்டது.

அடுத்த போட்டி கோலியின் ஆர்.சி.பி அணியுடனான பரபரப்பான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து 141 ஓட்டங்களை பெறுகிறது.
142 என்ற வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஆர்.சி.பி இன் முதல் விக்கெட்டை (கோலியை) புவனேஸ்வர் குமார் எடுக்கிறார்.

இப்போட்டியிலும் உம்ரன் மலிக்குக்கு 06 ஆவது ஓவர் வழங்கப்படுகிறது.களத்தில் மெக்ஸ்வெல் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்கிறார்.

முதல் பந்து 148Kmh
இரண்டாவது பந்து. 149.5Kmph
மூன்றாவது பந்து 150Kmph
நான்காவது பந்து 153.9Kmh
நான்காவது பந்திலே இந்த சீசனில்
அதி வேக பந்து வீசிய சாதனையை வைத்திருந்த அன்ரிச்_நோர்ட்ஜ் (152Kmh)
இன் சாதனையை முறியடிக்கிறான்.

வரலாற்று ஏடுகளில் மட்டுமன்றி  மக்களின் மனங்களிலும் உம்ரன்_மலிக் எனும் பெயர் பொறிக்கப்படுகிறது.

முதல் ஓவரில் 01 ஓட்டத்துக்கு 01 விக்கெட்
இரண்டாவது ஓவரில் 03 ரன்
மூன்றாவது ஓவரில் 05 ஓட்டம்
என கலக்கி கொண்டிருக்கிறான்.
போட்டி மெதுவாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பக்கம் திரும்புகிறது.

ஆர்.சி.பி அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 18 பந்துகளுக்கு 23 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. பந்து உம்ரன் மலிக்குக்கு வழங்கப்படுகிறது. களத்தில் ஏ.பீ.டீ.வில்லியர்ஸ் & சஹ்பாஸ்
அந்த ஓவரில் வேகத்தால் மிரட்டி வெறும் 05 ஓட்டங்களை மட்டுமே விட்டு கொடுக்கிறான்.

பும்ரா ,மலிங்கா போன்று தன்னாலும்
டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியும் என தன்னை நிரூபிக்கிறான்.

அந்த போட்டியில் 04 ஓவர்கள் பந்து வீசி வெறுமனே 17 ஓட்டங்களை மட்டுமே விட்டு கொடுக்கிறான்.அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெவனேஸ்வர் குமாரின் அசத்தல் பந்துவீச்சால் வெற்றி பெறுகிறது.

இம்முறை ஐபிஎல் ஏலத்துக்கு வந்து உம்ரன் மலிக்கை எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை, 20 லட்சம் அடிப்படை விலையாக இருந்தும் எந்த ஒரு அணியும் இவரை ஆடும் உள்ளீர்க்கவில்லை.

சன் ரைசர்ஸ் இவரை  நெட் போலராக  பயிற்சிகளுக்காக பயன் படுத்திக் கொண்டிருந்தது, நடராஜனுக்கு திடீரென ஏற்பட்ட கொரோனா காரணத்தால் வலைப் பந்துவீச்சாளராக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த மலிக் அதிர்ஷ்டவசமாக அணுக்கள் உள் நுழைகிறார்.

ஆக மொத்தத்தில் நடராஜன் காட்டிய வழியில் இன்னுமொரு பின்தங்கிய கிராமத்தில், பின்தங்கிய குடும்பத்திலிருந்து இன்னும் ஒரு வீரன் எழுந்து வந்திருக்கிறான்.

இந்திய கிரிக்கெட்டை ஆள நடராஜன் எப்படி நெட் போலராக ஆஸ்திரேலியா புறப்பட்டு, அணிக்குள் நுழைந்து கலக்கினாரோ அதே மாதிரி உம்ரன் மலிக்கும் கலக்கி கொண்டிருக்கிறான்.

#Arshath