யார் இந்த ஜெய்ஸ்வால் ? பானிபூரி விற்றது முதல் பட்டையை கிளப்பிய ஆட்டம் வரை..!

யார் இந்த ஜெய்ஸ்வால் ? பானிபூரி விற்றது முதல் பட்டையை கிளப்பிய ஆட்டம் வரை..!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டி விறுவிறுப்பான நிலையில் நிறைவுக்கு வந்தது .

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கெய்க்வாட்டின் அற்புதமான சதத்தின் துணையோடு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

190 என்பது இந்த மைதானத்தில் இமாலய இலக்காகவே கணிக்கப்பட்டது, ஆனாலும் கூட இந்த இலக்கை17வது ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மிரட்டி பெற்றுக் கொண்டது.

இந்த வெற்றிக்கு காரணமாக ஆரம்பத்துடுப்பாட்டம் அமைந்திருந்தது. குறிப்பாக பவர் பிளேக்கான முதல் 6 ஓவர்களில் 81 ஓட்டங்களை ஜெய்ஸ்வால் மற்றும் இவென்  லூயிஸ் ஆகியோர்  பெற்றுக்கொண்டனர்.

அதிலும் 20 வயதான ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஜெஸ்வால்் 19 பந்துகளில் அரைச்சதம் அடித்து எல்லோரையும் மிரட்டியிருந்தார், வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தந்தையாருடன் சேர்ந்து வீதிகளில் பானிபூரி விற்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு கிரிக்கெட் மீது கவனம் செலுத்தி இன்று சாதித்திருக்கின்றார்.இப்போது ஐபிஎல்லின் பேசுபொருள் ஆகியிருக்கிறார்.

இந்திய அணிக்கு தேர்வாக முன்னர் வேகமாக IPL அரை சதத்தை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வால் வசமாகியிருக்கிறது.

ஜெய்ஸ்வால் தொடர்பான யூடியூப் காணொளி ???

இறுதியாக இடம்பெற்ற ஐசிசி இளகயோர் உலகக் கிண்ண போட்டிகளில் ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக விளையாடி தொடர்நாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.

உலக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியிடம் தோல்வியை தழுவி இருந்தமை முக்கியமானது.